uபேச்சுலர் சமையல்: நியூட்ரிஷியஸ் வெஜ் சாலட்!

Published On:

| By Balaji

உணவே மருந்து என்பார்கள். ஆனால் சில தவறான உணவுப் பொருட்களும், உணவுப் பழக்கமும் மனிதனுக்கு நோய்களை வரவழைக்கவும் காரணமாக இருக்கிறது. உணவு சாப்பிட வேண்டும் என்பதை விட எந்த நேரத்தில், எந்த உணவுப் பொருளை, எந்த அளவு எடுத்துக்கொள்கிறோம் என்பதும் முக்கியமானது. அந்த விதத்தில் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களை அள்ளித்தரும் சுவையான நியூட்ரிஷியஸ் வெஜ் சாலட் எப்படி செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வெள்ளரி

தக்காளி

வெங்காயம்

கேரட்

குடமிளகாய்

(இவை ஒவ்வொன்றையும் பொடியாக நறுக்கி தலா ஒரு கப் வீதம் எடுத்துக்கொள்ளவும்)

முளை கட்டிய பாசிப்பயிறு – ஒரு கப்

எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

வெள்ளை மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மல்லித்தழை – சிறிதளவு

சீஸ் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

ஒரு அகன்ற பாத்திரத்தில், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெள்ளரி, தக்காளி, வெங்காயம்,கேரட், குடமிளகாய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் முளை கட்டிய பயிறு சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு, கருப்பு மிளகுத்தூள், வெள்ளை மிளகுத்தூள், சீஸ் துருவல், வெண்ணெய் மற்றும் மல்லித்தழை கலந்து பரிமாறினால் சத்தான நியூட்ரிஷியஸ் வெஜ் சாலட் ரெடி.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share