நர்சரி பள்ளிகள் திறக்கப்படுமா?

Published On:

| By Balaji

தமிழகத்தில் நர்சரி பள்ளிகளைத் திறப்பது குறித்து விரைவில் தெளிவான அறிக்கை வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 14ஆம் தேதி, தமிழக அரசு வெளியிட்ட ஊரடங்கு தொடர்பான அறிவிப்பில், நவம்பர் 1ஆம் தேதி முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பணிகள் முழுமையாகச் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று திருச்சியில் ஏசி பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது. முதலமைச்சருடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்குச் சத்துணவு கட்டாயம் கொடுப்பது பற்றியும், அவர்களை வரவழைப்பது பற்றியும் தான் விவாதித்தோம். ஆனால் அந்த அறிவிப்பில் நர்சரி கிண்டர்கார்டன் பள்ளிகளும் இணைந்து வந்துள்ளது. இது குறித்துத் தெளிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக்கூடாது. பாகுபாடு காட்டக்கூடாது மாணவர்களைத் துன்புறுத்தும் ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா இருந்தாலும், இல்லாவிட்டாலும் கல்வி தொலைக்காட்சி எப்போதும் போலத் தொடர்ந்து இயங்கும் என்று கூறினார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share