b
நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள ‘டே பிரேக்’ தொடரின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரையன் ரால்பின் கிராஃபிக் நாவல் தொடரை அடிப்படையாகக் கொண்டு, அதே பெயரில் உருவாகியிருக்கிறது டே பிரேக். டே பிரேக் ஒரு பிளாக் காமெடி கதைக்களமாகும். இது உயர்நிலைப் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட 17 வயதான ஜோஷ், ஜாம்பிக்களால் பேரழிவுக்குண்டான கலிபோர்னியா நகரத்தில், காணாமல் போன தனது காதலியைத் தேடும் கதையாகும்.
மத்தேயு ப்ரோடெரிக், ஆஸ்டின் க்ரூட், கொலின் ஃபோர்டு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நெட்பிளிக்ஸின் ‘ஒரிஜினல்’ எனப்படும் அதன் சொந்தத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இத்தொடர் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது.
ஆஸ்கர் விருது பெற்ற மேட் மாக்ஸ் ஃபுயூரி ரோட் திரைப்படத்தின் உலகத்தை நியாபகப்படுத்தும் டே பிரேக், ஆங்காங்கே நிகழும் நகைச்சுவை, சாகசங்களால் கவனம் பெறுகின்றது. வரும் அக்டோபர் 24ஆம் தேதி பத்து பாகங்களுடன் வெளியாகவிருக்கிறது டே பிரேக்.
�,”