என்.ஆர் சி என்ற திட்டமே பாஜக அரசிடம் இல்லை என்று பிரதமர் மோடி அறிவித்த நிலையில், அதன் பின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதை உறுதிப்படுத்திவிட்ட நிலையில். மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த விவகாரத்தில் இன்னொரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
என்.ஆர்.சி. அமல்படுத்தப்பட்டால் மாநில அரசுகளை நிச்சயம் கலந்து ஆலோசிப்போம் என்றும், என்பிஆர் என்ற தேசிய மக்கள் பதிவேட்டுக்கு சேகரிக்கப்படும் தரவுகள் என்.ஆர்.சிக்கு பயன்படுத்தப்படலாம் அல்லது பயன்படுத்தப்படாமலும் போகலாம் என்று கூறியிருக்கிறார் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்
“ஒரு நிலைப்பாடு எடுக்கப்பட வேண்டும். ஒரு சட்ட செயல்முறை உள்ளது. முதலில் ஒரு முடிவு, இரண்டாவது அறிவிப்பு, பின்னர் செயல்முறை, சரிபார்ப்பு, ஆட்சேபணை கேட்டல், மேல்முறையீட்டு உரிமை. மாநில அரசுடன் கலந்தாலோசிக்கும். அதன் பிறகுதான் மத்திய அரசு முடிவெடுக்கும், என்.ஆர்.சி. குறித்து ஏதாவது செய்ய வேண்டுமானால், அது பகிரங்கமாக செய்யப்படும்.. எதுவும் ரகசியமாக இருக்காது. என்ற ரவிசங்கர் பிரசாத் அசாமில் நடத்தப்பட்ட என்.ஆர்.சி உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உள்ளது என்றும் வலியுறுத்தினார்.
CAA மற்றும் NRC க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக காங்கிரஸ் மற்றும் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு பதிலளித்துள்ள சட்ட அமைச்சர், “ முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம்தான், 2010 ல் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் மக்களவையில் இது வெளிப்படையானது என்று என்.பி.ஆர். ஐ அறிவித்தார்.” என்பதையும் சுட்டிக் காட்டினார்.
�,”