என்.ஆர்.சி. எங்கள் திட்டத்தில் இல்லை: பிரதமர் மோடி

Published On:

| By Balaji

தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி மத்திய அரசு இதுபற்றி விவாதித்ததே இல்லை என்று பிரதமர் மோடி நேற்று (டிசம்பர் 22) கூறியிருக்கிறார்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இதையடுத்து நாடு முழுமைக்குமான தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். இந்நிலையில் நாடு முழுதும் நடக்கும் போராட்டங்களுக்கு இடையே நேற்று டெல்லியில் ராம் லீலா மைதான கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி புதிய கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் பற்றி தனது அரசாங்கம் 2014 ல் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து ஒரு விவாதமும் இல்லை, ஒரு பேச்சும் இல்லை என்று மோடி அறிவித்துள்ளார்.

டிசம்பர் 9 ம் தேதி மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த நாட்டில் என்.ஆர்.சி நடக்கும் என்பது எங்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும்”என்று கூறியிருந்தார்.

ஆனால் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா பிரச்சாரத்தைத் தொடங்க டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் நடந்த பேரணியில் உரையாற்றிய மோடி,

“என்.ஆர்.சி பற்றி பொய்கள் பரப்பப்படுகின்றன … இது [என்.ஆர்.சி] காங்கிரஸ் காலத்தில் செய்யப்பட்டது. அப்போது நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்களா? நாங்கள் அதை உருவாக்கவில்லை; அது நாடாளுமன்றத்திற்கு வரவில்லை, மத்திய அமைச்சரவைக்கு வரவில்லை. அதன் விதிகள் மற்றும் விதிமுறைகள் வகுக்கப்படவில்லை.

எனது அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், 2014 முதல் இன்று வரை, நாட்டின் 130 கோடி குடிமக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், என்.ஆர்.சி என்ற வார்த்தையில் எந்த விவாதமும் இல்லை. இது பற்றி எந்த பேச்சும் கூட இல்லை. உச்சநீதிமன்றம் அவ்வாறு கூறிய பின்னரே, அது [என்.ஆர்.சி] அசாமுக்கு செய்யப்பட வேண்டியிருந்தது”என்று கூறியிருக்கிறார் பிரதமர் மோடி.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share