கிச்சன் கீர்த்தனா: நூடுல்ஸ் சமோசா

Published On:

| By Balaji

நூடுல்ஸ் என்றால் அவசர உணவாக இரண்டே நிமிடங்களில் செய்து கொடுத்துவிட்டு வேலையை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் அதையே பார்ட்டி உணவு போல பிரமாதமாக மாற்றலாம். குட்டீஸ் மட்டுமன்றி குடும்பத்திலுள்ள அனைவரும் ருசிக்கலாம். அதற்கு இந்த நூடுல்ஸ் சமோசா சிறந்த உதாரணம்.

**என்ன தேவை?**

நூடுல்ஸ் – ஒரு பாக்கெட்

மைதா மாவு – 2 கப்

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பொடியாக நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன்

காய்கறிக் கலவை (நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், குடமிளகாய்) – ஒரு கப்

தக்காளி சாஸ் – ஒரு டீஸ்பூன்

சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு எல்லாக் காய்கறிகளையும் சேர்த்து நன்கு வதக்கவும். நூடுல்ஸ் பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி நூடுல்ஸை வேகவைத்து, காய்கறிகள் சேர்த்து வதக்கவும். அதனுடன் சோயா சாஸ், தக்காளி சாஸ், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

மைதா மாவுடன் சிறிதளவு எண்ணெய், உப்பு, தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். பிறகு மாவைச் சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் தேய்த்து இரண்டாக நறுக்கவும். ஒவ்வொரு அரை பாகத்தின் நடுவிலும் சிறிதளவு நூடுல்ஸ் கலவையை வைத்து முக்கோணமாக மடித்து ஓரங்களை அழுத்தி ஒட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுச் செய்துவைத்த சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். விருப்பமான சாஸுடன் பரிமாறவும்.

**[நேற்றைய ரெசிப்பி: நூடுல்ஸ் பக்கோடா](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2021/08/30/1/noodles-pakoda)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share