கிச்சன் கீர்த்தனா: நூடுல்ஸ் பக்கோடா

Published On:

| By Balaji

சட்டெனச் சமைத்துவிடக்கூடிய உணவுகளில் முதலிடம் பிடிப்பது நூடுல்ஸ்தான். மூன்று வேளையும் நூடுல்ஸ் சாப்பிட விரும்பும் குழந்தைகள் நிறையவே இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வயதினரையும் சாப்பிட தூண்டும் இந்த நூடுல்ஸ் பக்கோடா.

**என்ன தேவை?**

நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (டேஸ்ட் மேக்கருடன் கூடியது)

கேரட், குடமிளகாய் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – அரை கப்

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

கடலை மாவு – அரை கப்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நூடுல்ஸை மட்டும் வேகவிட்டு இறக்கி வடிகட்டவும். அகலமான பவுலில் கேரட், குடமிளகாய், கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கடலை மாவு, உப்பு, நூடுல்ஸ் மசாலா (டேஸ்ட் மேக்கர்) சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வடிகட்டிய நூடுல்ஸ் சேர்த்து மிருதுவாகக் கலக்கவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்).

வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். நூடுல்ஸ் கலவையை ஸ்பூனில் எடுத்து மெதுவாக பக்கோடாக்கள் போல் செய்து கவனத்துடன் எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பக்கோடாக்களைச் சுத்தமான கிச்சன் டவலில் போட்டு அதிகப்படியான எண்ணெயை நீக்கவும். தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.

**[நேற்றைய ஸ்பெஷல்: மட்டன் பிரியாணியும் இறால் தொக்கும்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2021/08/29/1/mutton-biriyani-and-prawn-thokku)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share