தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் புதிய உயிரிழப்பு இல்லை!

public

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 1,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2000 என்ற எண்ணிக்கையிலேயே இருந்து வந்தது. இந்த எண்ணிக்கையிலிருந்து குறையாமல் இருந்தது. இதையடுத்து, ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பலனாக, ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு பிறகு பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 27) சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 1,542 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர். 17,797 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ள நிலையில், 1,793பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 162 பேரும், செங்கல்பட்டில் 126 பேரும், கோவையில் 231 பேரும், ஈரோட்டில் 122 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 3 பேரும்,

கோவையில் 5 பேரும், ஈரோட்டில் 2 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 27 மாவட்டங்களில் புதிய உயிரிழப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.