�
கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் உதகையில் தேயிலை எஸ்டேட் இயங்குவதற்கும், தேயிலை தொழிற்சாலை செயல்படவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொலக்கம்பை அருகில் கிரேக்மோர், உட்லாண்ட்ஸ், மேனர் போன்ற தேயிலை தோட்டங்களில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த மாதம் பெய்த கோடை மழையால் தேயிலைக்கு நடப்பு மாதம் ஓரளவு தேயிலை மகசூல் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர். தற்போது தேயிலை அறுவடைக்குத் தோட்டங்களை கவாத்து செய்வது, செடிகளுக்கு களை கொல்லி அடிப்பது, தோட்டங்களில் சால் ஒதுக்குவது உட்பட பல்வேறு பராமரிப்பு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இங்கு பணிபுரியும் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் அடுத்த அறிவிப்பு வரும் வரை தொழிற்சாலையை இயக்க வேண்டாம் என்றும் தேயிலை பறிக்கும் பணியை நிறுத்தி வைக்கும்படியும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேயிலை பறிக்கும் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 500க்கும் மேற்பட்டவர்கள் வேலையிழந்துள்ளனர்.
**-ராஜ்**
.�,