நீலகிரி: 7ஆம் தேதி முதல் கோடை விழா

Published On:

| By admin

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா மே மாதத்தில் மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகளை இணைத்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை விழா கோத்தகிரியில் நேரு பூங்காவில் நடைபெறவுள்ள காய்கறி கண்காட்சியுடன் வருகிற 7ஆம் தேதி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து நீலகிரி கோடை விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் மே மாதத்தில் கொண்டாடப்படவுள்ளது. 7ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் ஊட்டியில் புகைப்படக் கண்காட்சி சேரிங்கிராஸில் உள்ள தோட்டக்கலைத்துறை அரங்கில் நீலகிரி மாவட்ட வனத்துறை மூலம் நடத்தப்படுகிறது.

இதையடுத்து 13, 14 மற்றும் 15ஆம் தேதிகளில் கூடலூரில் கோடை விழாவுடன் வாசனை திரவிய கண்காட்சியும், 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் ஊட்டியில் அரசினா் ரோஜா பூங்காவில் ரோஜா மலா்கண்காட்சியும் நடக்கிறது. கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊட்டி மலர் கண்காட்சி 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ளது. 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சியும் நடைபெறுகிறது.

கோடை விழாவில் பரதநாட்டியம், கிராமிய கலைகள், இன்னிசை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பழங்குடியினா் கலாச்சார மையத்திலும், 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அரசினா் தாவரவியல் பூங்காவிலும், 18ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஊட்டி படகு இல்லத்திலும் நடத்தப்படவுள்ளது.

18ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மகளிா் சுய உதவிக்குழு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், ஆவின், இன்கோசா்வ், டான்டீ போன்றவற்றின் பொருட்காட்சி ஊட்டி பழங்குடியினா் கலாச்சார மைய தரை தளத்தில் நடைபெறவுள்ளது. கோடைவிழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளான படகுப்போட்டி 19ஆம் தேதி ஊட்டி ஏரியில் நடக்கிறது

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share