ரிலாக்ஸ் டைம்: நிலக்கடலைப் பால்!

public

சத்துகள் நிறைந்த அனைவருக்கும் ஏற்றது நிலக்கடலை (வேர்க்கடலை). இதில் பால் எடுத்து அருந்தி ரிலாக்ஸ் டைமில் பருகலாம். உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.

**எப்படிச் செய்வது?**

100 கிராம் நிலக்கடலையை முதல் நாள் இரவு நீரில் ஊறவைக்கவும். ஊறிய கடலையின் தோலை நீக்கி, ஒரு கப் தேங்காய்ப்பால், ஒரு வாழைப்பழம், சிறிதளவு ஏலக்காய், 50 கிராம் வெல்லம், சிறிதளவு சுக்கு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அருந்தலாம்.

**சிறப்பு**

நிலக்கடலையில் உள்ள புரதமும் வெல்லத்தில் உள்ள இரும்புச்சத்தும் உடலுக்கு வலுவைக் கூட்டும். ரத்த சோகையைப் போக்கும். வாழைப்பழம் செரிமானப் பிரச்னையைப் போக்கும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.