புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி

Published On:

| By Balaji

கொரோனா பரவல் அச்சுறுத்தலால் தமிழகத்தில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

புதுச்சேரியில் ஏற்கனவே அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 2ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளன. எனினும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு டிசம்பர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் புதுச்சேரியில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தளர்வுகள் ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை மட்டும் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை கொண்டாட்டங்களை முன்னிட்டு காவல்துறையிடம் அனுமதி பெற்று கூடுதல் நேரம் மதுக்கடைகளை திறக்கலாம். கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி பொது மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தலாம் என புதுச்சேரி அரசு குறிப்பிட்டுள்ளது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share