புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் !

Published On:

| By Balaji

தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி இன்று (நவம்பர் 15) உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் ,பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பி. தில்லை நடராஜன், பதவி உயர்வு பெற்று பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு-II எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு-II எஸ்.பி.யாக இருந்த விஜயகுமார், புதிதாக உருவாக்கப்பட்ட *திருப்பத்தூர்* மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர் கூடுதல் எஸ்.பி.பாஸ்கரன், எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை நகர, தலைமையிட துணை ஆணையர் மகேஷ், சென்னை, சிஐடி, q பிரிவு, எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை, சிஐடி, q பிரிவு, எஸ்.பி.யாக இருந்த தர்ம ராஜன் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக இருந்த சுகுணா சிங், புதிதாக உருவாக்கப்பட்ட *தென்காசி* மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பி. இளங்கோ, எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 6ஆவது பட்டாலியன் (மதுரை) கமாண்டண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

அந்த பதவியிலிருந்த ஜெயசந்திரன், புதிதாக உருவாக்கப்பட்ட *கள்ளக்குறிச்சி* மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பயிற்சி மையப் பிரிவில் இருந்த கூடுதல் எஸ்.பி. மகாபாரதி, எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டு சிபிசிஐடி (சென்னை) சைபர் செல் எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

அந்த பதவியிலிருந்த சாமுண்டீஸ்வரி, காஞ்சிபுர மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

காஞ்சிபுர எஸ்.பி கண்ணன் புதிதாக உருவாக்கப்பட்ட *செங்கல்பட்டு* மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் எஸ்.பி. வேதரத்தினம், எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டு திருச்சி நகர (குற்றம் மற்றும் போக்குவரத்து) துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

அந்த பதவியிலிருந்த மயில்வாகனன் புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வர் மணி, சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்.பி. ராதாகிருஷ்ணன், சென்னை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

**ஆட்சியர்கள்**

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரண் குராலா, தென்காசி ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் , செங்கல்பட்டு ஆட்சியராக ஜான் லூயிஸ், திருப்பத்தூர் ஆட்சியராக சிவன் அருள், ராணிப்பேட்டை ஆட்சியராக திவ்ய தர்ஷினி ஆகியோரை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். புதிய மாவட்டங்களில் ஆட்சியராக நியமிக்கப்பட்டவர்கள், அந்தந்த மாவட்டங்களில் சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share