mஇன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

Published On:

| By Balaji

முன்னாள் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த இன்னசென்ட் திவ்யாவை, திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருக்கும் இன்னசென்ட் திவ்யாவை உச்ச நீதிமன்றம் அனுமதி இல்லாமல் பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதையடுத்து நிர்வாகரீதியிலான பணிகளை மேற்கொள்வதற்கு இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்வது அவசியமாகிறது என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்வதற்கு கடந்த 16ஆம் தேதி அனுமதி வழங்கியது.

இந்த அனுமதியையடுத்து, இன்னசென்ட் திவ்யா மாற்றப்பட்டு, நீலகிரியின் மாவட்ட ஆட்சியராக அம்ரித் நியமிக்கப்பட்டார். இதையடுத்து இன்னசென்ட் திவ்யாவுக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கான புதிய பொறுப்பு குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகமால் இருந்தது.

இந்த நிலையில், இன்று(டிசம்பர் 2) மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதில் இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக இயக்குநராகவும், ஆவின் நிர்வாக இயக்குநராக இருந்த கந்தசாமி பேரிடர் மேலாண்மை, வருவாய், நிர்வாக ஆணையராகவும், பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த சுப்பையன் ஆவின் நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share