eகொரோனா: 4 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு!

public

உலக நாடுகளை முந்தி கொரோனா பாதிப்பில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் மொத்த பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 14 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவின் தாக்கம் இன்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதனால் மொத்த மதிப்பு 3 லட்சத்து 95 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 375 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது.

மொத்த பாதிப்பில், ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 269 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 13 ஆயிரத்து 231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவது அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதுவரை 54 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ளது.

கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 3,877 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மட்டும் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,893 பேர் மரணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் சமீபகாலமாகப் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று மட்டும் 3,137 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்த பாதிப்பு 53 ஆயிரத்து 116 ஆக உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரே நாளில் 2,115 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 54 ஆயிரத்து 449 ஆக உள்ளது.

**மாநில வாரியான பட்டியல்**

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 45

ஆந்திரா – 7,961

அருணாச்சல பிரதேசம் – 103

அசாம் – 4,904

பிகார் – 7,181

சண்டிகர் – 381

சத்தீஸ்கர் – 2,028

ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டயு – 62

டெல்லி – 53,116

கோவா – 725

குஜராத் – 26,141

ஹரியானா – 9,743

இமாச்சலப் பிரதேசம் – 619

ஜம்மு-காஷ்மீர் – 5,680

ஜார்க்கண்ட் – 1,965

கர்நாடகா – 8,281

கேரளா – 2,912

லடாக் – 744

மத்தியப் பிரதேசம் – 11,582

மகாராஷ்டிரா – 124,331

மணிப்பூர் – 681

மேகாலயா – 44

மிசோரம் – 130

நாகாலாந்து – 198

ஒடிசா – 4,677

புதுச்சேரி – 286

பஞ்சாப் – 3,832

ராஜஸ்தான் – 14,156

சிக்கிம் – 70

தமிழ்நாடு – 54,449

தெலங்கானா – 6,526

திரிபுரா – 1,178

உத்தரகண்ட் – 2,177

உத்தரப் பிரதேசம் – 15,785

மேற்கு வங்கம் – 13,090

உலக அளவில் மொத்தம் 86 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 லட்சத்து 59 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை 22 லட்சம் பேரும், பிரேசிலில் 10 லட்சம் பேரும், ரஷ்யாவில் 5 லட்சத்து 69 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *