Jரிலாக்ஸ் டைம்: நாவல்பழ சூப்!

Published On:

| By Balaji

இதயத்துக்கு நண்பன் பொட்டாசியம். இது, தற்போது மலிவாகக் கிடைக்கும் நாவல் பழத்தில் நிறைவாக உள்ளது. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் விதமாகவும் இந்த சூப் அமையும்.

**எப்படிச் செய்வது?**

ஒரு பாத்திரத்தில் 100 மில்லி நீர்விட்டு, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைப் போட்டுக் கொதிக்கவிடவும். ஏழெட்டு நிமிடங்களுக்குப் பிறகு, சுத்தம்செய்து, விதை நீக்கப்பட்ட 100 கிராம் நாவல் பழத்தைப் போடவும். 20 நிமிடங்கள் கழித்து, அடுப்பை அணைத்துவிடவும். இதனை அப்படியே வடிகட்டி சூப் போல குடிக்கலாம்.

**சிறப்பு**

இதில் உள்ள சத்துகள், மூளையில் உள்ள ரத்தக் குழாய் சுவர் அடர்த்தியாகாமல் பார்த்துக்கொள்ளும். இதனால், பக்கவாதத்துக்கான வாய்ப்பு குறைகிறது. இதன் துவர்ப்புச் சுவை, கணையத்துக்கு நல்லது. இன்சுலின் சுரக்க உதவும். எலும்புகளை உறுதிசெய்யும். ஜீரணம் தொடர்பான பிரச்சினைகளையும் குணப்படுத்தும்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share