இணைய மோசடிகளால் பணம் பறிபோவதைத் தடுக்க தேசிய உதவி எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இணைய மோசடிகளால் பணம் பறிபோவதைத் தடுக்க ‘155260’ என்ற தேசிய உதவி எண்ணையும், புகார் தளத்தையும் மத்திய உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இணைய மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், இதில் புகார் அளிப்பதன் மூலம் தனது பணம் பறிபோகாமல் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
இதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் இயக்கி வருகிறது. ரிசர்வ் வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் ஒத்துழைப்புடன் இந்த உதவி எண் செயல்படுகிறது.
தற்போது, ஏழு மாநிலங்கள் இதை அமல்படுத்தி வருகின்றன. மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த புகார் தளம் தொடங்கிய இரண்டு மாதத்துக்குள் ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் இணைய மோசடியாளர்களின் கைக்கு செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
**-ராஜ்**
.�,