நாங்குநேரி: வெற்றியை முடிவு செய்யும் தேர்தல் புறக்கணிப்பு!

public

விக்கிரவாண்டியைவிட கிராமப்புறப் பகுதிகளை அதிகமாகக்கொண்ட நாங்குநேரி தொகுதியில்  நேற்று அக்டோபர் 21 நடைபெற்ற  இடைத் தேர்தலில் வாக்குப் பதிவு சதவிகிதம் 66 என்கிற அளவுக்குப் பதிவாகியிருக்கிறது.

தொகுதியில் சுமார் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தேவேந்திர குல வேளாளர் வாக்குகளில் பெரும்பாலும் பதிவாகாமல் இருந்ததாலேயே இந்த வாக்குப் பதிவு சதவிகிதச் சரிவு ஏற்பட்டிருக்கிறது.  பருத்திக் கோட்டை தேவேந்திர குல வேளாளர் சங்கம் உட்பட அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த பல சங்கங்கள் தங்களுக்கு தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயர் சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை  முன்வைத்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தேர்தல் நாளான நேற்று இந்த மக்கள் அடர்த்தியாக வசிக்கும்  நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பெரிய அளவு வாக்குப் பதிவாகவில்லை என்பதில் இருந்தே இவர்களின் தேர்தல் புறக்கணிப்பு வெற்றிகரமாக நடந்திருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆயர்குளம்,  உன்னாங்குளம், பெருமாள் நகர் போன்ற கிராமங்களில்  தேவேந்திர குல வேளாளர்கள் அதிகம் வசிக்கும் வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

நெல்லையப்பபுரம்  20, பருத்திப்பட்டு 34. செல்வின் நகர் 13, இளையர் குளம் 4, கல்லத்தி 11,  நெல்லை நகர் 1, சின்ன மூலக்கரை 6, என பல கிராமங்களில்  மிகச் சொற்ப ஓட்டுகளே பதிவாகின. இதனால்தான் வாக்குப் பதிவு சதவிகிதம் பெருமளவு குறைந்துவிட்டது.

புறக்கணித்த மக்களின் ஓட்டுகள் யாருக்குரியவை என்பதை வைத்தே இங்கே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. அது அதிமுக கூட்டணியான புதிய தமிழகத்தின் ஓட்டுகள் என்று திமுகவினரும், முக்குலத்து ஓட்டுகளுக்கு எதிரான அந்த ஓட்டுகள் திமுக கூட்டணிக்கே செல்ல வேண்டியவை என்று அதிமுக தரப்பிலும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

நாங்குநேரியின் வெற்றியைப் பதிவான வாக்குகளைவிட பதிவாகாத இந்த வாக்குகளே முடிவு செய்யப் போகின்றன என்பதே ஜனநாயகத்தின் விசித்திரம். �,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *