பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாத 367 பேர் மீது வழக்கு!

public

சென்னையில் இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை காவல்துறை அறிவித்தது.

2022 ஜனவரி 1 முதல் மே 5 வரையிலான காலப்பகுதியில் இரு சக்கர வாகன விபத்துக்களில் 98 பேர் உயிரிழந்தனர். இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் 80 பேர், பின் இருக்கையில் அமர்ந்தவர்கள் 18 பேர் என்றும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையிலும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் மே 23ஆம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவித்தது.

அதன்படி இன்று முதல் சென்னையில் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்கிறார்களா எனச் சென்னை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சென்னை முழுவதும் போக்குவரத்து போலீசார் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டு ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

அதன்படி இன்று (மே 23) ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 1278 வழக்குகளும், பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 367 வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாகச் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரட்கர் கூறுகையில், “பாலினம் மற்றும் வயது வித்தியாசமின்றி பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அபராதம் விதிப்பது என்பது மக்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முடிவு” என்று கூறினார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *