சாலை விரிவாக்கத்துக்காக ரோட்டின் இருபுறமும் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லை. ஆகவே, மயானத்துக்கு மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சியை அடுத்த கோலார்பட்டியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமை தாங்கிய அந்தக் கூட்டத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கத்தினர், கிராம மக்கள் கொடுத்த மனுவில், “பொள்ளாச்சியை அடுத்த கோலார்பட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பொள்ளாச்சி-பழனி செல்லும் நெடுஞ்சாலைக்கு அருகில் மயானம் இருந்தது.
எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தால் பல தலைமுறையாக இங்குதான் அடக்கம் செய்து வந்தோம். தற்போது சாலை விரிவாக்கத்துக்காக ரோட்டின் இருபுறமும் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மயானம் மாயமாகிவிட்டது.
தற்போது இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு மயானம் இல்லை. ஆகவே, மயானத்துக்கு மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரியுள்ளனர்.
**-ராஜ்-**
.