N‘நோட்டா’வில் நிறைவேறிய கனவு!

public

சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா மூலம் இசையமைக்கும் கனவு இசையமைப்பாளர் சாம் சி.எஸ்ஸுக்கு ‘நோட்டா’ திரைப்படம் மூலம் நிறைவேறியிருக்கிறது.

விஜய் தேவரகொண்டா, மெஹ்ரின், நாசர் நடித்துள்ள நோட்டா படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கி உள்ளார். ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசை அமைத்துள்ளார். இன்று (அக்டோபர் 5) படம் வெளியாகிறது. இந்தப் படத்தின் பின்னணி இசைக்கு சிம்பொனி இசைக் கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

படத்தில் இடம்பெறும் தி ரைஸ் ஆஃப் லீடர் என்ற பாடலின் சூழலானது ஓர் ஆழ்ந்த, சக்தி வாய்ந்த இசையாக அமைந்துள்ளது. மாசிடோனியா சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா இருந்தால் படத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தும் என்று உணர்ந்துள்ளார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். ஸ்ட்ரிங்ஸ் மற்றும் பிராஸ் இசைக்கலைஞர்கள் 150க்கும் மேற்பட்டோர் பின்னணி இசையில், குறிப்பாக இந்தப் பாடல் இசைக்கோர்ப்பில் பங்கு பெற்றுள்ளனர். இதனால் நோட்டாவின் பின்னணி இசை பிரமாண்டமாக அமைந்துள்ளதாம். படத்தில் உள்ள காட்சிகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருப்பதினால், அவற்றிற்குப் பொருத்தமான இசையை வழங்கியுள்ளார் சாம். இது இவரின் பல ஆண்டு காலக் கனவாக இருந்துள்ளது, அது நோட்டா படத்தின் மூலம் நனவாகி இருக்கிறது சாம்முக்கு.

[தி ரைஸ் ஆஃப் லீடர் மேக்கிங் வீடியோ](https://www.youtube.com/watch?v=7yG9OrNkKew&feature=youtu.be)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *