பொறியியல் படிப்பை முடிக்கும் இந்திய மாணவர்களில் வெறும் 54 சதவிகிதத்தினருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
பி.வி.ஆர். மோகன் ரெட்டி கமிட்டி சார்பாக இந்தியாவில் பொறியாளர்களின் வேலைவாய்ப்புகள் குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் பொறியியல் படிப்புகளுக்கான சீட்டுகளில் 50 சதவிகிதம் அளவுப் பங்கு தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய ஐந்து தென் மாநிலங்களில்தான் இருக்கிறது. 2017-18ஆம் ஆண்டில் மேற்கூறிய ஐந்து மாநிலங்களில் மட்டுமே மொத்தம் 3.45 லட்சம் பேர் பொறியியல் துறையில் நுழைந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் 16.35 லட்சம் பொறியாளர்களுக்கான பணி வாய்ப்புகள் இருக்கும் நிலையில் வெறும் 8 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. பொறியியல் படிப்பை முடிக்கும் 8 லட்சம் மாணவர்களில் 3.45 லட்சம் பேர் மட்டுமே பணியில் சேர்கின்றனர். அதில் 1.88 லட்சம் பேர் ஐந்து தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர். சென்ற ஆண்டில் மட்டும் 3,500 கல்லூரிகளிலிருந்து 1,500 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டில் பொறியியல் படிப்பை முடித்த மாணவர்களில் 26,000 பேர் ஐடி துறையில் தொழில் பயிற்சி பெற்றதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
பொறியியல் படிப்பை முடிக்கும் 8 லட்சம் மாணவர்களில் வெறும் 6,000 பேர் மட்டுமே தொழில்முனைவில் ஈடுபடுகின்றனர்.�,