Nவிமான எரிபொருளுக்கு ஜிஎஸ்டி!

Published On:

| By Balaji

விமான எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வளையத்துக்குள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஜூலை 21ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் சில பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் விமான எரிபொருள் ஜிஎஸ்டி வரி வளையத்தில் கொண்டு வரப்படலாம் எனவும், விமான எரிபொருளுக்கு 28 சதவிகித வரி விதிக்கப்படலாம் எனவும் பெயர் கூற விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் பிசினஸ் ஸ்டேண்டர்டு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். இது சாத்தியமானால் பெட்ரோலியப் பொருட்களில் முதன்முறையாக ஜிஎஸ்டி வரி வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட பொருளாக விமான எரிபொருள் இருக்கும்.

விமான எரிபொருளுக்குத் தற்போது மாநில அரசுகள் 14 சதவிகித கலால் வரியுடன் 30 சதவிகிதம் விற்பனை வரியைக் கூடுதலாக விதிக்கின்றன. இதனால் ஆசியாவிலேயே விமான எரிபொருளுக்கு அதிக விலை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. விமான நிறுவனங்களின் ஒட்டுமொத்தச் செலவுகளில் எரிபொருளுக்கான செலவு மட்டுமே 40 சதவிகிதம் வரையில் இருக்கிறது. டெல்லியில் விமான எரிபொருளுக்கான மொத்த வரி 39 சதவிகிதமாக உள்ளது. ஆனால், சிங்கப்பூரில் வெறும் 7 சதவிகித மதிப்புக் கூட்டு வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் விமான எரிபொருள் ஜிஎஸ்டி வளையத்துக்குள் வந்தால் அவற்றின் விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடாமல் ஒரே அளவாக இருக்கும் என்பதால் அடுத்த வாரம் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share