�
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா, விக்ரம் நடிப்பில் உருவாகும் துருவ நட்சத்திரம் ஆகிய இரு படங்கள் நீண்ட நாள்களாக தயாரிப்பில் உள்ளன. இந்நிலையில் அவர் இயக்கியுள்ள குயின் வெப் சீரிஸ் ரிலீஸுக்கு தயாராகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ஒரே நேரத்தில் பலரும் திரைப்படங்களை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள போது கௌதம் மேனன் அதை வெப்சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், சசிகலாவாக விஜி சந்திரசேகரும் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
சிம்பு, மஞ்சிமா மோகன் இணைந்து நடித்த அச்சம் என்பது மடமையடா திரைப்படம் 2016ஆம் ஆண்டு வெளியானது. அந்தப் படத்தைத் தொடர்ந்து கௌதம் இயக்கத்தில் வேறெந்தப் படமும் வெளியாகாததால் தற்போது வெளியாக உள்ள வெப் சீரிஸுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பணப் பிரச்சினையால் நின்றுபோயுள்ள துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை கோடை விடுமுறையின் இறுதிக்குள் வெளியிடுவதற்கான முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன.�,