Nமீண்டும் தள்ளிப்போன கொளஞ்சி!

Published On:

| By Balaji

மூடர் கூடம் நவீன் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்த கொளஞ்சி படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு வெளியான மூடர் கூடம் படத்தின் வெற்றிக்குப் பின், நவீன் தயாரிப்பில் உருவான படம் கொளஞ்சி. இயக்குநர் சிம்பு தேவனிடம் உதவியாளராக இருந்த தனராம் சரவணன் இயக்கிய படம் இது. குறும்புக்கார மகனுக்கும் கண்டிப்பான தந்தைக்குமான உறவை பேசும் படம். வருடங்கள் முன்பே தயாரான இந்தப் படம் சில சிக்கல்களால் வெளியாகாமல் தள்ளிப்போய்க் கொண்டேயிருந்தது. இந்த நிலையில் நாளை (ஜூலை 19) கொளஞ்சி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜூலை 26ஆம் தேதி கொளஞ்சி வெளியாகும் என நேற்று (ஜூலை 17) வெளியான புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது படக்குழு. அதே தேதியில்தான் சந்தானத்தின் ஏ1, விஜய் தேவர கொண்டாவின் டியர் காம்ரேட், சந்தீப்பின் கண்ணாடி, சுசீந்திரனின் ஏஞ்சலினா ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. தனுஷ் நடித்த எனை நோக்கிப் பாயும் தோட்டா அதே தினத்தில் தான் வெளியாகும் எனத் தகவல்கள் சென்ற வாரம் வெளியானது. ஆனால், இன்னும் படக்குழுவிடமிருந்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை. தனுஷ் படமும் வரும் நிலையில், தியேட்டர்கள் கிடைப்பதில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

**

மேலும் படிக்க

**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**

**[ வைகோ எம்.பி.யாக சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/07/17/51)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share