nமத்திய வரிகள் ஆணையத்துக்கு புதிய தலைவர்!

Published On:

| By Balaji

நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்துக்கு புதிய தலைவராக பிரமோத் சந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்னும் 2 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் டிசம்பர் மாதத்திலிருந்து 2 தேர்தல் ஆணையர்களை மட்டுமே கொண்டு தேர்தல் ஆணையம் இயங்கி வந்தது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிகரித்துள்ள பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு புதிய தேர்தல் ஆணையராக, நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவராக இருந்த சுஷில் சந்த்ரா நேற்று (பிப்ரவரி 14) நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவரும் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார். நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவரான புரமோத் சந்திர மோடி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய வருவாய் சேவையில் (ஐ.ஆர்.எஸ்.) 1982ஆம் ஆண்டு தொகுப்பில் வந்தவர். வருமான வரித் துறையின் உச்சபட்ச கொள்கை வகுப்பு அமைப்பான நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் புதிய தலைவராக பிரமோத், பணியாளர் அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share