nமக்கள் நலக் கூட்டணி: சைக்கிள் பிரச்சாரம்

Published On:

| By Balaji

ஒவ்வொருக் கட்சியினரும் பிரச்சாரம் செய்வதற்காக பல லட்ச ரூபாய் செலவு செய்து வாகனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்கள் நலக் கூட்டணியினர் எளிய வகையில் பிரச்சாரம் செய்து, மக்களை சென்று அடைய முடிவு செய்துள்ளனர். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் வழி ‘சைக்கிள் பிரச்சாரம்’. இதுபற்றி கேட்டதற்கு, எளிமையும் வித்தியாசமும் தான் எங்களின் அடையாளம். இன்னமும் கார், வேன், தேவையில்லை. மோட்டார் வண்டிகள் போகாத இடங்களிலும் செல்லக்கூடிய, பெட்ரோல் டீசல் செலவே வைக்காத வண்டி ‘சைக்கிள்’ தான். அந்த சைக்கிள் மூலம் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். இதற்காக ஆயிரம் நவீன மிதிவண்டிகளை உருவாக்கியிருக்கோம். ஒவ்வொரு வண்டியிலும் ஒலிபெருக்கி இருக்கும். எங்கள் மக்கள்நலக் கூட்டணியின் விளம்பர போர்டு பொறுத்தப்பட்டிருக்கும். துண்டு பிரசுரங்களை விநியோகித்து கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்ய உள்ளோம். இதுதான் எங்கள் பிரச்சார வாகனம் என்கின்றனர்” மார்க்சிஸ்ட் கட்சியினர்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel