nபுதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியீடு!

public

புதிய பாடத்திட்டத்துக்கான வரைவு அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 20) வெளியிடுகிறார்.

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் கடந்த 2003ஆம் ஆண்டு தயார் செய்யப்பட்டு, 2006ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த வகுப்புகளில் 14 ஆண்டுகள் பழமையான பாடத்திட்டத்தையே, மாணவர்கள் படித்துவருகின்றனர். மற்ற வகுப்புகளுக்கு ஏழு ஆண்டுகளாக ஒரே பாடத்திட்டம் அமலில் உள்ளது. எனவே, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்றத் தமிழக அரசு முடிவு செய்தது.

அதைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ,க்கு இணையாக புதிய பாடத்திட்டம் தயார் செய்யும் பணியை, பள்ளிக் கல்வித் துறை தொடங்கியது. அதற்காகப் பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவை அமைத்தது.

இந்தக் குழு கடந்த ஜூலை 20ஆம் தேதி கருத்தரங்கம் நடத்தி, பாடத்திட்டத்தை மாற்றும் பணியை தொடங்கியது. சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில், பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டது. பின்னர், கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் துறை வல்லுநர்களிடம், ஆலோசனைகள் பெற்று, ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் பாட திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த குழுவினரின் அறிவுரைப்படி, புதிய பாடத்திட்டத்துக்கான கலைத்திட்ட வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக இந்த ஆண்டு 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு 2,7,10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. மேலும் 2020-2021ஆம் ஆண்டு 3,4,5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. புதிய பாடத்திட்டத்துக்கான வரைவு அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார். பின், வரைவு அறிக்கை, பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கருத்து கேட்கப்படும்.

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் நேற்று (நவம்பர் 19) வருவாய் வட்டாட்சியர் அலுவலகத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன், “புதிய பாடத்திட்டம் சிபிஎஸ்இக்கு இணையாகவும், அனைவரும் வியக்கத்தக்க வகையிலும் இருக்கும்” எனத் தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *