Nபாண்ட்யாவுக்கு கோலி அறிவுரை!

public

விளையாட்டை நாம் மதித்தால் அது நமக்குப் பலனளிக்கும் என்று ஹர்திக் பாண்ட்யாவுக்கு விராட் கோலி அறிவுரை வழங்கியுள்ளார்.

சுமார் நான்கு மாதங்களுக்கு பிறகு ஹர்திக் பாண்ட்யா இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்பியுள்ளார். கடந்த மாதம் ‘காபி வித் கரன்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிராக ஹர்திக் பாண்ட்யா சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதால் தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளானார். எனினும், ஆட்டக் களத்திற்கு திரும்பிய பின்னர் நேர்த்தியாக விளையாடினார். இந்நிலையில், சர்ச்சைகளால் ஹர்திக் பாண்ட்யா நல்ல கிரிக்கெட் வீரராக உருவெடுப்பார் என்று விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். எனினும், யாராக இருந்தாலும் விளையாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் கோலி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசுகையில், “அணிக்கு ஹர்திக் பாண்ட்யா சமநிலையை அளிக்கிறார். இன்றும் அவர் சிறப்பாகப் பந்து வீசினார். பந்து வீச்சுத் திறமையை மேம்படுத்த அவர் உழைத்துள்ளார் என்பதையே இது காட்டுகிறது. நீங்கள் விளையாட்டை மதித்தால் அது உங்களுக்குப் பலனளிக்கும். ஹர்திக் பாண்ட்யா சிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுப்பார் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்ட்யா குறித்த சர்ச்சையை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் விசாரணை அதிகாரிகளை விரைவில் நியமிக்கவுள்ளது. ஆகையால் வரவிருக்கும் போட்டிகள் அனைத்தும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *