nநீட்: மதிப்பெண்ணுக்கான காலம் நீட்டிப்பு!

Published On:

| By Balaji

நீட் தேர்வு மதிப்பெண்ணுக்கான பயன்பாட்டுக் காலம் மூன்று ஆண்டுகள் வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிநாடு சென்று மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட் தேர்வு மதிப்பெண்ணுக்கான பயன்பாட்டுக் காலம் நீட்டிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை எழுப்பப்பட்டது. தற்போது வரை, நீட் தேர்வு மதிப்பெண்ணுக்கான பயன்பாட்டுக் காலம் ஓராண்டாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில், இது குறித்துப் பரிசீலிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சில் ஆட்சிமன்றக் குழுவானது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்தது. தற்போது இதற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தேர்வு பெற்ற பின்னரும் அந்த கல்வியாண்டில் மருத்துவப் படிப்பில் சேர முடியாதவர்கள், இந்த உத்தரவினால் பயன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் அடுத்த ஆண்டில் தேர்வு எழுத வேண்டிய கட்டாயமில்லை என்று கூறுகின்றனர் இத்தேர்வை எழுதிய மாணவர்கள் சிலர். இந்த ஆண்டு மே 4ஆம் தேதியன்று நீட் தேர்வு நடைபெறவுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share