மக்களவைத் தேர்தல் நிறைவுற்றுள்ள நிலையில் அடுத்து ஆட்சியமைக்கும் அரசுக்கு வேலை உருவாக்கம், வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட சவால்கள் காத்திருக்கின்றன.
17ஆவது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. 542 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 19ஆம் தேதி நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் பெரும்பாலும் பாரதிய ஜனதா கட்சிக்கே சாதகமாக இருக்கின்றன. எனவே மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மோடி ஆட்சிக்கு வந்தால் அவருக்கு பல்வேறு சவால்கள் காத்துக்கொண்டிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் சுமார் 12 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளனர். அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு அதிக முதலீடுகளை ஈர்க்கும் தொழில்களை ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பு அடுத்த அரசுக்குக் காத்திருக்கிறது. சென்ற ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.6 சதவிகிதமாக உயர்ந்திருந்தது. இது 2016 அக்டோபருக்குப் பிறகு மிகப் பெரிய உயர்வாகும். அதேபோல இந்தியாவின் வேலையின்மை விகிதம் 2017-18ஆம் ஆண்டில் முந்தைய 45 ஆண்டிகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதாக அரசு தரப்பு ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியது.
பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரையில், அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் மிக மோசமாக 6.6 சதவிகித வளர்ச்சியை மட்டுமே இந்தியா கொண்டிருந்தது. கார் மற்றும் இருசக்கர வாகன விற்பனை சரிவடைந்ததோடு, தொழில் துறை உற்பத்தியும் மிகப் பெரிய சரிவைச் சந்தித்திருந்தது. குறிப்பாக, கிராமப்புற நுகர்வு மிகவும் மந்தமாக இருப்பதாகவும், அதை மேம்படுத்துவதில் நிதியைச் சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தக உறவுகளைப் பலப்படுத்த வேண்டிய பணியும் அடுத்து ஆட்சியமைக்கும் அரசுக்குக் காத்திருக்கிறது.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)
**
.
**
[அதிமுக: கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/57)
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
�,”