ஹாலிவுட்டின் வெற்றிகரமான சீரிஸ் படங்களில் XXX படங்களுக்குத் தனி இடம் உண்டு. இதன் முதல் இரு பாகங்களை Rob Cohen இயக்கினார். கடந்த ஜனவரி மாதம் வெளியான மூன்றாவது பாகமான xXx: Return of Xander Cage திரைப்படத்தை DJ Caruso இயக்கினார். இந்தப் படத்தில் வின் டீசலோடு பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இணைந்து நடித்திருந்தார். இதன் மூலம் அடுத்தடுத்து ஹாலிவுட் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் தீபிகாவின் மற்றொரு ஹாலிவுட் படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அது XXX தொடரின் நான்காவது பாகமாகும். இந்தத் தகவலை இந்தப் படத்தின் இயக்குநர் DJ Caruso தனது டிவிட்டர் பக்கத்தில் ஜூன் 12ம் தேதி பதிவிட்டுள்ளார். அதில் நான்காம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், கதையை மெருகேற்றும் பணி நடந்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தீபிகாவின் ரசிகர்கள் இந்தப் படத்தில் முந்தைய படங்களில் நடித்தவர்கள் நடிப்பார்களா என்று கேள்வி எழுப்ப அதற்கு அனைவரும் நடிக்கின்றனர் எனப் பதிலளித்தார். இதை மேலும் உறுதி செய்திடும் வகையில் மற்றொரு ரசிகர் படத்தில் தீபிகா நடிக்கிறாரா? என நேரடியாகக் கேட்டுள்ளார். அதற்கு DJ Caruso கண்டிப்பாக நடிக்கிறார் எனப் பதிலளித்தார். இதனால் தீபிகா மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.�,