இந்திய சினிமாவில் ஒரு வயதுக்கு மேல் கதாநாயகிகள் குணச்சித்திர கதாபாத்திரங்களாக மாறுவதும், கதாநாயகர்கள் பல வருடங்களானாலும் கதாநாயகர்களாகவே இருப்பதும் தொன்றுதொட்டு பின்பற்றப்படும் வழக்கமாகிவிட்டது. வெகு சில நடிகர்கள் மட்டுமே தங்கள் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மற்றவர்கள் எல்லாம் இன்னும் கதாநாயகியுடன் டூயட் பாடுவதை நிறுத்தவில்லை.
‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு தமன்னா மார்க்கெட் சரிவில் உள்ளதால் பாலகிருஷ்ணாவுடன் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சீனியர் நடிகர்களுடன் நடிப்பது நம் கதாநாயகிகளுக்கு புதிதல்ல, தமன்னா திரையுலகுக்கு வந்தபொழுது எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். வயதான கதாநாயகர்கள் ரொமாண்ஸ் செய்து நடிப்பதை விடுத்து நல்ல கதையினை தேர்வு செய்து அதில் இளம் நாயகிகளை பயன்படுத்தலாம். தமன்னா பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர்ந்திருப்பது பலரால் கலாய்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்து தமன்னாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, சிரஞ்சீவியுடன் காஜல் நடித்திருக்கிறார் நான் நடிப்பதில் என்ன தவறு என்று தெரிவித்துள்ளார். பாலகிருஷ்ணாவுடன் அசின், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல பிரபலமான கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
�,