தனுஷ் நடிப்பில் 2014ஆம் ஆண்டில் வெளியான ‘வேலையில்லாப் பட்டதாரி’, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. தனுஷ் மற்றும் கஜோல் நடித்து வரும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படத்தின் மியூசிக் வீடியோ மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த்தின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் கதை எழுதியுள்ள ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், புரொமோஷனுக்காக தனுஷ் மற்றும் கஜோல் பங்குபெறும் மியூசிக் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. அதன் படப்பிடிப்பு குறித்து இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கஜோல் நடித்துள்ளார். அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், விவேக் என முதல் பாகத்தில் நடித்திருந்த பல்வேறு கதாபாத்திரங்கள் இப்படத்திலும் தொடர்கிறார்கள். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ இணைந்து தயாரித்துள்ள ‘விஐபி-2’ வருகிற ஜூலை 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருப்பதாக அறிவித்துள்ளார்கள்.�,