nடெல்லியில் வசித்தால் வாழ்நாள் குறையும்!

Published On:

| By Balaji

x

உலகிலேயே காற்று மாசு அதிகமாக உள்ள இரண்டாவது நகராக உள்ள டெல்லியில் வசிப்பவர்களின் வாழ்நாளில் 10 ஆண்டுக் காலம் குறையும் என்ற அதிர்ச்சித் தகவலைக் காற்றுத் தர அளவீடு அமைப்பு நேற்றைய முன்தினம் (நவ-19) வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு குறித்து

டெல்லியில் செயல்படும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது:

டெல்லியில் கடந்த 20 ஆண்டுகளாக காற்றில் உள்ள மாசு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில் காற்றின் மாசானது மிகவும் அபாயகரமாக அதிகரித்துள்ளது. இதனால் டெல்லியானது ஆசியாவிலேயே அதிகமான வாழ்நாள் குறைவுள்ள நகரமாக மாறியுள்ளது. நாட்டிலுள்ள மிகவும் மாசுக்குள்ளான 50 நகரங்களில் டெல்லி படுமோசமானதாக மாறியுள்ளது.

காற்றின் மாசானது வாழ்நாள் காலத்தை சராசரியாக 1.8 ஆண்டுகள் குறைக்கின்றது. இது மனிதர்களின் ஆரோக்கியத்திற்கான பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஒப்பீட்டளவில் புகை பிடிப்பவர்களின் ஆயுள் காலம் 1.6 ஆண்டுகள்தான் குறைகிறது.

1998இல் காற்றிலுள்ள மாசுத்துகள்களால் மனிதனின் ஆயுள் காலமானது 2.2 ஆண்டுகள்தான் குறைந்திருந்தது. ஆனால் தற்போது 4.3 ஆண்டுகளாக குறைந்துள்ளது. பிகார், உத்தரப் பிரதேசம், ஹரியானா,பஞ்சாப் மற்றும் டெல்லியில் காற்றிலுள்ள மாசுக்களின் அளவு மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் ஆயுள் காலம் குறைவது 6 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share