ஜீவா நடிப்பில் நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருக்கும் ‘கீ’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அறிமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படம் ‘கீ’. நிக்கி கல்ராணி அனைகா சோடி இணைந்து நடித்துள்ளனர். ராஜேந்திர பிரசாத், கோவிந்த் பத்மசூர்யா, சுஹாசினி, ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு சில மாதங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தணிக்கைத் துறையிடம் ‘யூ’ சான்றிதழ் பெற்றது. படத்தின் ரிலீஸ் தேதிகள் சில முறை அறிவிக்கப்பட்டு, பின் கைவிடப்பட்டன. இந்த நிலையில் இப்போது ‘கீ’ படத்தை ஏப்ரல் 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சித்திரை திருநாளை முன்னிட்டு வெளியாகும் இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
ஏப்ரல் 12ஆம் தேதி இந்தப் படம் வெளியாக, அதைத் தொடர்ந்து ஜீவா நடித்துள்ள ‘ஜிப்ஸி’, ‘கொரில்லா’ ஆகிய படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.�,