Nசெயல்படாத டிஜிட்டல் இந்தியா!

public

டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி ஆட்சியாளர்கள் நிறைய விளம்பரப் பேச்சுகளைப் பேசி வருகின்றனர். எனினும், இன்றளவிலும் வயது வந்தவர்களில் வெறும் 25 விழுக்காட்டினர் மட்டுமே இணையச் சேவைகளைப் பயன்படுத்துவதாகவும், மீதமுள்ளவர்கள் இணைய வளையத்துக்கு வெளியே இருப்பதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

வயது வந்தவர்களில் இணையச் சேவையைப் பயன்படுத்துபவர்களின் உலக சராசரி 75 விழுக்காடாக உள்ள நிலையில், இணையச் சேவைகளைக் குறைவாகப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் இந்தியா முன்னிலையில் உள்ளதாக பீவ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2017ஆம் ஆண்டின் தகவல்களைக் கொண்டு இந்த ஆய்வு விவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதால், அதற்குப் பிறகு இணையச் சேவை பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நுழைவுக்குப் பிறகு இணையச் சேவை பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மறுபுறம், தென்கொரிய நாட்டின் வயது வந்தவர்களில் 96 விழுக்காட்டினர் இணையச் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். இந்திய வயது வந்தவர்களின் இணையப் பயன்பாடு ஆப்ரிக்க சஹாரா நாடுகளுக்கு இணையாக இருக்கிறது. எனினும், இந்தியாவில் 18 முதல் 36 வயதுக்குட்பட்டவர்களில் இணையச் சேவைகளைப் பயன்படுத்துவோரின் விகிதம் 35 விழுக்காடாக உள்ளது. 37 வயதுக்கு மேற்பட்டவர்களில் இணையச் சேவைகளைப் பயன்படுத்துவோரின் விகிதம் 13 விழுக்காடாக மட்டுமே உள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

இத்தகைய நிலையில்தான் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும், ரொக்கமில்லாப் பொருளாதாரத்தையும் (Cashless Economy) ஊக்குவிக்கப்போவதாக ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0