எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் சென்சார் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஆனால், படப்பிடிப்பு பணிகள் நிறைவடையாமல் இழுபறியாகவே இருந்தது. சில வாரங்களுக்கு முன்னர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் மும்பையில் நிறைவடைந்தது. இக்காட்சிகளில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். இதன்பின்னர் படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று படம் சென்சாருக்கு தயாராகிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் மதன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
தற்போது சென்சார் பணிகளும் நிறைவடைந்துவிட்டது. இப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ்’ மதன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்களின் பொறுமையை சோதித்த பிறகு ஒருவழியாக எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியாக தயாராகிவிட்டது. இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.�,