nசீர்மரபினர் பழங்குடியினர்: புதிய அரசாணை!

Published On:

| By Balaji

சீர்மரபினர் சமூகத்தினரை இனிமேல் சீர் மரபினர் பழங்குடியினர் என அழைக்கும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் சீர்மரபினர் பிரிவில் 68 சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். 1979ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, இவர்கள் சீர்மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்பட்டு வந்தனர். ஆனால், அந்த ஆண்டு முதல் சீர்மரபினர் என்று மட்டுமே இவர்களை அழைக்க வேண்டும் என்றும், பழங்குடியினர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அரசாணை பிறக்கப்பட்டது. இதனால், அந்த மக்களுக்கு சலுகைகள் மறுக்கப்படுவதாகவும், மீண்டும் சீர்மரபினர் பழங்குடியினர் என்று பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வருவாய் நிர்வாக முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 1979ஆம் ஆண்டு அரசாணையைத் திரும்பப் பெற்றது தமிழக அரசு. இதையடுத்து, இன்று (மார்ச் 9) புதிய அரசாணையை வெளியிட்டது.

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், “சீர்மரபினர் சமூகத்தினர் என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை சீர்மரபினர் பழங்குடியினரை மட்டுமே குறிப்பிடுவதாக சமூக நலத் துறை அமைத்த குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு இவர்கள் சீர்மரபினர் பழங்குடியினர் என்றே அழைக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share