சர்க்கரைக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி ஒதுக்கீட்டுக்கான காலக்கெடு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் சர்க்கரை விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் 2018-19 ஆண்டுக்கான சர்க்கரை உற்பத்தி 187 டன்னாகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 203 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தியாகும் என்று முன்பு மதிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல, சர்வதேச அளவில் இந்த ஆண்டுக்கான சர்க்கரை நுகர்வு 186 மில்லியன் டன்னாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 2018-19ஆம் ஆண்டுக்கான உற்பத்திக்குச் சமமாக உள்ளது. இந்தியாவில் 10 மில்லியன் டன் சர்க்கரை இருப்பு உள்ளது. இந்திய சர்க்கரை ஆலைகள் 8.3 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளன. இதில் 4.5 லட்சம் டன் சர்க்கரை உத்தரப் பிரதேசத்திலிருந்து மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
தேசிய சர்க்கரை கழகத்தின் நிர்வாக இயக்குநர் பிரகாஷ் நாய்க்னவரே இதுகுறித்து *பிசினஸ் லைன்* ஊடகத்திடம் பேசுகையில், “சர்வதேச அளவில் நீண்ட காலமாக வறட்சி நிலவுகிறது. சர்வதேச அளவில் விலை சரிந்துள்ளதால் ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் குறைந்து பேரல் ஒன்றுக்கு 85 டாலராக உள்ளது. இதனால் எத்தனால் உற்பத்திக்கு பிரேசில் அதிக முக்கியத்துவம் அளிக்கவும் வாய்ப்புள்ளது” என்றார்.
பிரேசிலின் நடவடிக்கையால் சர்வதேச அளவிலான சர்க்கரை உற்பத்தி குறைந்து விலை மீண்டும் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் குறைந்தபட்ச ஏற்றுமதி ஒதுக்கீட்டின்படி 2 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு அனுமதியளித்தது. குறைந்தபட்ச ஏற்றுமதி ஒதுக்கீட்டிற்குப் போதிய ஆதரவு இதுவரை இல்லாததால் இதற்கான காலக்கெடுவை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.�,