முருகேசன், கஸ்தூரி இருவரும் செங்கல்பட்டு பழவெளியைச் சேர்ந்த தம்பதிகள். இவர்கள் செங்கல்பட்டில் உள்ள தர்மராஜா கோயில் அருகே நடைபாதையில் வசித்துவந்துள்ளனர். மார்ச் 25ம் தேதி இரவு நடைபாதையோரம் இவர்கள், தங்களுடைய ஆண் குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலையில் கண்விழித்துப் பார்த்தபோது குழந்தை காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். கைக்குழந்தையை அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் செங்கல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில், செங்கல்பட்டு சாஸ்திரி நகரைச் சேர்ந்த சுந்தரியின் மகனுக்கு குழந்தை இல்லாததால் அவருக்கு ஒரு குழந்தையை வாங்கித்தரச் சொல்லி, செங்கல்பட்டில் செல்போன் கடை வைத்துள்ள விநாயகம் என்பவரை அணுகியுள்ளார். அவர், தனது நண்பர் வேலு என்பவரிடம் குழந்தையைக் கடத்துவதற்கு ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளார். இதையடுத்து, இவர்கள் முருகேசன் கஸ்தூரியின் குழந்தையைக் கடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தப்பட்ட குழந்தை சென்னை ஆவடியில் இருப்பதைக் கண்டுபிடித்து போலீசார் மீட்டனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்ட சுந்தரி, விநாயகம், வேலு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.�,
Nகுழந்தையைக் கடத்திய கும்பல்!
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel