சரவணன் இயக்கத்தில் சசிக்குமார், ஜோதிகா நடிக்கும் புதிய படம் கிராமத்துப் பின்னணியில் உருவாகவிருக்கிறது.
ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜாக்பாட் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மாஸ் ஹீரோயினாக இப்படத்தில் முயற்சித்த ஜோதிகா தன் அடுத்தடுத்த படங்களிலும் வித்தியாசமான பாத்திரங்களை தேர்வு செய்து வருகிறார். திருமணத்திற்கு முன்பு ஜோதிகாவின் கால்ஷீட் எவ்வாறு பிஸியாக இருந்ததோ அதே போலவே, அவரது இரண்டாவது இன்னிங்க்ஸும் பிஸியாகவே அமைந்து வருகிறது. அடுத்தடுத்து வெளியாகும் படங்கள், நிறைவடையும் படப்பிடிப்பு, ஒப்பந்தமாகும் புதிய படங்கள் என ‘மோஸ்ட்-வாண்டட்’ நாயகியாக வலம் வருகிறார் ஜோ.
கார்த்தியுடன் முதன் முறையாக ஜோதிகா நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதமே நிறைவு பெற்றது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் இந்த த்ரில்லர் படம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, ஃப்ரெட்ரிக் இயக்கும் பொன்மகள் வந்தாள் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், கத்துக்குட்டி படத்தை இயக்கிய சரவணன் இயக்கும் அடுத்த படத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளார். இப்படத்தில் சசிக்குமார் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஜோதிகா – சசிக்குமார் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்தப் பெயரிடப்படாத படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றார்களா, இல்லை கார்த்தி-ஜோதிகா நடித்துள்ள படம் போல சகோதர-சகோதரியாக நடிக்கவுள்ளார்களா என இனி வரும் நாட்களில் தகவல்கள் வெளியாகும்.
முழுக்க கிராமியப் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் தற்போது இணைந்துள்ளனர். ஜோதிகாவின் ஜாக்பாட் படத்தில் சமுத்திரக்கனியும் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**
மேலும் படிக்க
**
**[காஷ்மீர் பிரச்சினை: அரசியல் சாசனப் பிரிவு 370 – 35ஏ என்ன சொல்கிறது?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/05/15)**
**[பழிவாங்கிய ராமானுஜம், ராஜேந்திரன்: ஜாங்கிட்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/04/40)**
**[வீட்டுக் காவலில் தலைவர்கள்: காஷ்மீரில் தொடரும் பதற்றம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/05/12)**
**[ரஜினிக்காக வருந்திய கமல்ஹாசன்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/05/9)**
**[காஷ்மீர் – 370: மாநிலங்களவையில் கடும் அமளி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/08/05/33)**
�,”