nகிச்சன் கீர்த்தனா: ராகி வேர்க்கடலை அல்வா

Published On:

| By Balaji

ஏழைகள் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறு தானியங்கள் இன்று பணக்காரர்கள் மத்தியிலும் உலாவர ஆரம்பித்துவிட்டன. அரிசி சோறு சாப்பிடுவதுதான் கௌரவம் என்றிருந்த நிலை மாறி, இன்று சிறு தானியங்கள் எங்கு கிடைக்கும் என்று தேடும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். இயற்கை அங்காடிகள், சிறு விவசாயக் குழுக்கள் மூலமே நகரப் பகுதிகளில் எட்டிப் பார்த்திருந்த சிறு தானியங்களை இன்று கார்ப்பரேட் கம்பெனிகளே கையில் எடுத்துவருகின்றன.

**என்ன தேவை?**

கேழ்வரகு மாவு – 100 கிராம்

பால் – ஒரு கப்

நறுக்கிய பூசணித் துண்டுகள் – 100 கிராம்

சர்க்கரை – கால் கிலோ

நெய் – தேவையான அளவு

தோல் நீக்கிய வேர்க்கடலை – 100 கிராம்

தேங்காய்த் துண்டுகள், முந்திரித் துண்டுகள் – சிறிதளவு

**எப்படிச் செய்வது?**

கேழ்வரகு மாவை நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு ஆறவைத்து, தண்ணீர் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் கலக்கவும். கடாயில் பாலை ஊற்றி, கொதித்ததும் நறுக்கிய பூசணித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். இதில் சர்க்கரை சேர்த்து, கரைத்து வைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து, தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறவும். ஒரு டீஸ்பூன் நெய்யில் வேர்க்கடலை, தேங்காய்த் துண்டுகள், முந்திரித் துண்டுகளை வறுத்து, அல்வாவில் சேர்த்து, கிளறிப் பரிமாறவும்.

**என்ன பலன்?**

நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்துகள் இதில் நிறைந்துள்ளதால், குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியாகச் செய்து தரலாம். உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். இளம் தாய்மார்களுக்கு, தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும். ரத்த சோகையைத் தடுக்கும்.

[நேற்றைய ரெசிப்பி: சிவப்பு அரிசி – கேழ்வரகு இடியாப்பம்](https://minnambalam.com/k/2019/07/13/2)

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share