nகிச்சன் கீர்த்தனா: பனீர் முட்டைகோஸ் ரோல்

Published On:

| By Balaji

}எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆர்வம் இன்று பலருக்கும் உள்ளது. ஆனால், அதற்கேற்ற உணவைச் சாப்பிடுகிறார்களா என்பது சந்தேகமே. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பனீர் முட்டைகோஸ் ரோல் நல்ல பலனைத் தரும்.

**என்ன தேவை?**

முட்டைகோஸின் இதழ் – 5

துருவிய பனீர் – ஒரு கப்

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு.

**எப்படிச் செய்வது?**

முட்டைகோஸ் இதழைக் கொதிக்கும் நீரில் போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து உலர வைக்கவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, துருவிய பனீர் சேர்த்து மேலும் வதக்கவும். பின்பு கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி ஆறவைக்கவும். ஆறிய கலவையை முட்டைகோஸ் இதழின் நடுவில் வைத்து ரோல் போல் செய்து வைக்கவும். முட்டைகோஸ் ரோலை ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

[நேற்றைய ரெசிப்பி: கத்திரிக்காய் பாதாம் கறி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/02/10/3)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share