கிச்சன் கீர்த்தனா: தேன்குழல்

Published On:

| By admin

த்தான, சுவையான, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகை தேன்குழல். பாரம்பரியமான பலகாரமான இதில் சேர்க்கும் அனைத்துப் பொருள்களும் சுவைக்கு மட்டுமன்றி உடலுக்கும் நன்மை பயக்கும் என்பதால் அனைவருக்கும் ஏற்றது; ஆரோக்கியமானது.
**என்ன தேவை?**
பச்சரிசி மாவு – ஒரு கப்
உளுத்தம் மாவு – கால் கப்
பொட்டுக்கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
எள் – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
சீரகம் – 2 சிட்டிகை
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவைச் சேர்த்து அதில் வறுத்துப்பொடித்து சலித்த உளுத்தம் மாவு மற்றும் பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து அதனுடன் எள், பெருங்காயம், சீரகம் கலந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதில் வெண்ணெய் சேர்த்துக் கலந்து தேவையான அளவு நீர் தெளித்து, முறுக்கு மாவுப் பதத்தில் பிசைந்து முறுக்குப் பிழியும் அச்சில் இட்டுப் பிழிந்து சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான தேன்குழல் தயார்.
**[நேற்றைய ரெசிப்பி: சோளக் கஞ்சி!](https://minnambalam.com/public/2022/06/14/1/corn-pordridge)**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share