nகிச்சன் கீர்த்தனா: கிரீன் வெஜிடபிள் ரைஸ்

Published On:

| By Balaji

வித்தியாசமான நிறத்தில் கூடுதலான கலவையில் உணவு பொருள் இருந்தால் அதைச் சுவைக்க வேண்டும் என்று எண்ணம் பலருக்கு எழும். அந்த வகையில் இந்த கிரீன் வெஜிடபிள் ரைஸ் கண்ணைக் கவரும் நிறத்துடன் எல்லாரும் சாப்பிடக்கூடிய சத்தான உணவாகவும் அமையும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

**என்ன தேவை?**

பாசுமதி அரிசி – அரை கிலோ

கேரட் துருவல், பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது) – தலா 1 கிண்ணம்

வெங்காயம், குடமிளகாய் – தலா ஒன்று

பீன்ஸ் – 10

பச்சை மிளகாய் – 3

புதினா, கொத்துமல்லி – சிறிதளவு

நெய், உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

குக்கரில் ஒரு பங்கு பாசுமதி அரிசிக்கு, இரு பங்கு தண்ணீர் விட்டு இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸ்சை பொடியாக நறுக்கவும். கடாயில், நெய் விட்டு நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாயை வதக்கவும். பிறகு, கேரட் துருவல், நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய பீன்ஸ், பட்டாணி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். காய்கள் சரியான பதத்தில் வெந்ததும், புதினா சேர்த்து கலந்து இறக்கவும். அதில், சூடான சாதத்தைச் சேர்த்து கலந்து, கொத்துமல்லி தூவி பரிமாறவும். இதற்கு, தயிர் பச்சடி சூப்பர் சைடிஷ்.

[நேற்றைய ரெசிப்பி: காப்ஸிகம் ரைஸ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/02/25/3)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share