கிட்ஸ் ஸ்பெஷல்
குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கம் குறித்த புரிதல் முதலில் பெற்றோரிடம் இருந்து தொடங்க வேண்டும். முன்பெல்லாம் குழந்தைகள் தன் தேவைக்கு ஒரு பொருளைக் கேட்டால் அதன் நன்மை, தீமை அறிந்து வாங்கிக் கொடுப்பார்கள் பெற்றோர்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் குழந்தை அடம்பிடிக்கிறது என்பதற்காகவே கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். மேலும், பெற்றோர்களுக்கு நல்ல உணவை சமைப்பதற்கான நேரமின்மையால் ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் இவையெல்லாம் நம் உணவில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
**என்ன தேவை?**
வடித்த சாதம் – ஒரு கப்
பால் – அரை கப் (காய்ச்சி ஆறவைத்தது)
தயிர் – 2 டீஸ்பூன்
திராட்சை (பச்சை, கறுப்பு) – தலா 10
மாதுளை முத்துகள் – 2 டீஸ்பூன்
கடுகு, கடலைப் பருப்பு – தலா அரை டீஸ்பூன்
இஞ்சித் துருவல், கொத்தமல்லித் தழை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப் பருப்பு, இஞ்சி தாளிக்கவும். அகலமான பாத்திரத்தில் சாதத்துடன் உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும். இதனுடன் பால், தயிர், தாளித்த கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை திராட்சை, கறுப்பு திராட்சை, மாதுளை முத்துகள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும்.
**என்ன பலன்?**
கோடையின் வெப்பத்தைக் குறைக்கும். பழங்களுடன் சேர்த்துச் செய்வதால் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சத்துகளும் அடங்கியது.
[நேற்றைய ரெசிப்பி: அவல் பகளாபாத்](https://www.minnambalam.com/k/2019/05/28/2)
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: தோல்வி- தினகரனிடம் சசிகலா கேட்ட கேள்வி!](https://minnambalam.com/k/2019/05/28/80)
**
.
**
[தேர்தல் முடிவு: சசிகலா ரியாக்ஷன்!](https://minnambalam.com/k/2019/05/28/27)
**
.
**
[திமுக: ராஜ்ய சபாவுக்குச் செல்பவர்கள் யார்?](https://minnambalam.com/k/2019/05/28/29)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்களா, தொண்டர்களா? முடிவுக்கு வந்த ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/05/27/68)
**
.
**
[நம்பிக்கையில்லாத் தீர்மானம் எப்போது: ஸ்டாலின் பதில்!](https://minnambalam.com/k/2019/05/28/53)
**
.
.�,”