சூர்யா நடிக்கும் என்ஜிகே திரைப்படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடிக்கும் காப்பான் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அயன், மாற்றான் படங்களுக்குப் பின் சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி அமைந்திருந்தாலும் படம் பற்றி உருவாகியுள்ள எதிர்பார்ப்புகளுக்கு முக்கிய காரணம் படத்தில் இணைந்துள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கைதான். இந்தி, மலையாளம், தமிழ் என முன்னணி நடிகர், நடிகைகளை படக்குழுவில் இணைத்துள்ளனர். மோகன்லால், ஆர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் சாயிஷா சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு கட்டமாக நடைபெற்ற படப்பிடிப்புகளில் கலந்துகொண்ட சாயிஷா வசனம் பேசி நடிக்கும் காட்சிகள், பாடல் காட்சிகள் என தனது காட்சிகள் அனைத்தையும் நிறைவு செய்துள்ளார். காப்பான் படத்தை ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து சாயிஷா தனது கணவர் ஆர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் டெடி படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
சக்தி சவுந்தரராஜன் இயக்கும் இப்படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்கிறார். சக்தி சரவணன் சண்டை காட்சிகளை அமைக்கிறார். சிவநந்திஸ்வரன் படத்தொகுப்பை கவனிக்க, டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)
**
.
**
[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)
**
.
**
[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)
**
.
**
[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)
**
.
.�,”