அரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன் ராஜ் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறவுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக மோகன்ராஜ் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று (மே 18) மாலை 8 மணியளவில் கரூரில் உள்ள மோகன் ராஜ் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் திடீரென சோதனை நடத்தினர். பறக்கும் படை அதிகாரி மனோகரன் தலைமையில் சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த சோதனை நீடித்தது. மோகன் ராஜ் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பணம் வைத்திருப்பதாக வந்த புகாரையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சோதனையில் எதுவும் கைப்பற்றப்படாததால் பறக்கும் படையினர் திரும்பிச் சென்றனர்.
இதுவரை எதிர்க்கட்சியினருக்குச் சொந்தமான இடங்களில் மட்டுமே தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். பணப்பட்டுவாடா புகார் அளித்தும் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களுடைய ஓர் இடத்தில் கூட சோதனை நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் கமல்ஹாசன் கட்சியின் வேட்பாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் இதே மோகன் ராஜை ஆதரித்துப் பேசும்போதுதான் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்து இந்தியா முழுவதும் சர்ச்சைக் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் நிலையில், மோகன் ராஜ் அலுவலகத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)
**
.
**
[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
.
�,”