nஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறிய சேவை!

public

இக்பால் அகமது 2009ஆம் ஆண்டில் மங்களூரில் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்த ஒரு வருடத்துக்குப் பின்னர் இந்திய நிர்வாகச் சேவைக்குத் (IAS) தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கனவுகள் இருக்கும். இருப்பினும், போட்டி நிறைந்த உலகில் நாம் விருப்பப்படாத ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கும். அதுபோன்றுதான், இக்பால் அகமது வாழ்க்கையிலும், ஏழு ஆண்டுகள் கழித்துதான் அவருடைய உண்மையான கனவை நிறைவேற்ற முடிந்தது. அது வேறு ஒன்றுமில்லை, ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் அளிக்க வேண்டும் என்பதுதான் அது. ஏனெனில், அவர் முறையாகப் பதிவு செய்யவில்லை.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சம்பவத் மாவட்டத்தின் மாவட்ட நீதிபதியாக இக்பால் செப்டம்பர் 15ஆம் தேதி உத்தரகாண்ட் மருத்துவக் குழுவால் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, தன்னுடைய முதல் மருத்துவ சேவையைக் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) தொடங்கினார்.

சம்பவத் மாவட்டத்தில் 65 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில், 42 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இங்கு ஒரு மாவட்ட மருத்துவமனை மற்றும் 21 மருத்துவமனைகள் உள்ளன.

எதுவாக இருப்பினும், உத்தரகாண்டில் 2,700 மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால், 1,000 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.

இக்பாலுக்கு முன்பு, ஐஏஎஸ் அதிகாரியாக ராகேஷ் குமார் இருந்தார். அவரும் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் அளித்துவந்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.